top of page
  • Facebook
  • Twitter
  • Instagram

அக அமைதி தியானம் கூட்டுத் தியானப் பயிற்சி அழைப்பிதழ்

Writer: Mahendran RMahendran R

அன்புடையீர்,

அமைதி நிறைந்த அன்பு வணக்கம்.

உங்கள் வாழ்வில் அமைதியும் அன்பும் நிறைந்திருக்க வாழ்த்துகள்.


கூட்டுத் தியானப் பயிற்சி வகுப்புகள்

அனைவருக்கும் பலன் தரும் வகையில் ஒவ்வொரு மாதமும் 30ற்கும் மேற்பட்ட இணைய வழி தியானப் பயிற்சி வகுப்புகள் அக அமைதி தியானத்தின் வாயிலாக நடைபெற்று வருகின்றன. சமூக நல்மாற்றத்திற்கான இந்த முன்னெடுப்பில் ( நமது பயிற்சி வகுப்பில்) கலந்து கொண்டு பயன்பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


ஒவ்வொரு வகுப்பிலும் மருத்துவத் துறையைச் சார்ந்தவர்கள், பொறியாளர்கள், குடும்பத் தலைவிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், சுய தொழில் முனைவோர் எனப் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. அவர்கள் தங்கள் பயிற்சி அனுபவங்களையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டு உள்ளனர். இதன் மூலமாக அக அமைதி தியானப் பயிற்சிகள் அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்பதனை அறிய முடிகிறது.


இம்முயற்சியின் மற்றொரு முன்னெடுப்பாக கட்டணமில்லா இணைய வழி தியானப் பயிற்சி வகுப்பிற்கு உங்களை வரவேற்கிறோம்.


கூட்டுத் தியானப் பயிற்சி அறிமுகம்



கூட்டுத் தியானப் பயிற்சி அறிமுகக் காணொளி

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள பின்வரும் இணைய முகவரியைப் பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளுங்கள்




பயிற்சி வகுப்பிற்கு கட்டணம் ஏதுமில்லை. உங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் உங்களைப் பயிற்சி வகுப்பில் சந்திக்கிறேன்.



நடைபெறும் தேதி

நேரம் - தமிழக நேரப்படி

கிழமை

நிலை

19 மார்ச் 25

காலை 5

புதன்

பதிவு செய்க

12 மார்ச் 25

இரவு 8

புதன்

நிறைவு பெற்றது

6 மார்ச் 25

காலை 5.15

வியாழன்

நிறைவு பெற்றது

1 மார்ச் 25

இரவு 8

சனி

நிறைவு பெற்றது

26 பிப்ரவரி 25

காலை 5.15

புதன்

நிறைவு பெற்றது






2025 ஆண்டின் தியானப் பயிற்சி வகுப்புகள் குறித்த முழுத் திட்டத்தை அறிந்து கொள்ள தொடர்ந்து வாசியுங்கள்



2025 முழுத் திட்டம்

2025 ஆம் ஆண்டின் அக அமைதி தியானப் பயிற்சி வகுப்புகளின் முழுத் திட்டம் பற்றிய விளக்கம் இந்தக் காணொளியில் உள்ளன. அதோடு முழுத் திட்டமும் அடங்கிய pdf ஐ நீங்கள் நமது இணையப் பக்கத்தில் முகப்பு பகுதியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.




2025 ஆம் ஆண்டின் முழு பயிற்சி திட்டம் அறிமுகம்

ஏன்?

இன்றைய சமூகச் சூழலை முழுவதுமாக கருத்தில் கொண்டு நாம் அனைவரும் சந்தித்து வரும் பல்வேறு சவால்களுக்கு ஒரு நல்ல தீர்வை தியானப் பயிற்சிகள் வழங்கும் என்ற முழு நம்பிக்கையுடனே இந்த பயிற்சி வகுப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன.

அடிப்படை நோக்கம் " சமூக நல்மாற்றத்திற்கான பங்களிப்பை தியானப் பயிற்சிகளை மக்களுக்கு கற்றுத் தருதல் மூலம் செயல்படுத்துதல்"


தியான முறைகள்


இணைய வழி தியானப் பயிற்சிகளில் நாம் ஆனா பானா சதி, விபாசனா என்ற இரண்டு தியான முறைகளைக் கற்று, பயிற்சி செய்வதோடு அவற்றை நம் வாழ்வியல் மேம்பாட்டிற்கு எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பதனையும் அறிந்து கொள்வோம்.


பயிற்சி திட்டம்


2025 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ள பயிற்சிகள் அனைத்தும் அனைவருக்கும் பயன் தரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன். பொதுவாக இவை 1 நாள், 3 நாள், 5 நாள், 10 நாள் வகுப்புகளாக திட்டமிடப்பட்டுள்ளன.

பெண்களுக்கான சிறப்பு 1 நாள் மற்றும் 3 நாள் பயிற்சி வகுப்புகளும் பின்வருமாறு திடமிடப்பட்டுள்ளன


அனைவருக்குமான பயிற்சிகள்

அனைவரும் கலந்து கொள்ளும் பயிற்சிகள்


10 நாள் பயிற்சி தியானப் பயிற்சி :

ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு துவங்கி 10 நாட்கள் நடைபெறும். கலந்து கொள்ள விரும்புவோர் பின்வரும் முகவரியை நேரடியாகப் பயன்படுத்தலாம். நீங்கள் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களுக்கும் பதிவு செய்து கொள்ள இயலும்.




5 நாள் பயிற்சி தியானப் பயிற்சி :

ஒவ்வொரு மாதமும் 3 ஆவது வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு துவங்கி 5 நாட்கள் நடைபெறும். 21 மார்ச் 25 காலை 5 மணிக்கு துவங்கும் பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்ய பின்வரும் தகவலைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்



3 நாள் பயிற்சி தியானப் பயிற்சி :

ஒவ்வொரு மாதமும் 1,2,3 ஆவது வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.45 மணிக்கு துவங்கி 3 நாட்கள் நடைபெறும். இம்மாதம் மட்டும் ஒரு சிறு மாற்றமாக முதல் 3 நாள் தியானப் பயிற்சி வகுப்பு திங்கட்கிழமை அதாவது 3 மார்ச் 25 இரவு 7.45 மணிக்கு துவங்கி நடைபெறும்.





1 நாள் பயிற்சி தியானப் பயிற்சி :

ஒவ்வொரு மாதமும் 1,2,3 ஆவது வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.45 மணிக்கு துவங்கி நடைபெறும்.





பெண்களுக்கான பயிற்சி வகுப்புகள்:


3 நாள் பயிற்சி தியானப் பயிற்சி :

ஒவ்வொரு மாதமும் 1,2 ஆவது திங்கட்கிழமைகளில் காலை 11:00 மணிக்கு துவங்கி 3 நாட்கள் நடைபெறும்.





1 நாள் பயிற்சி தியானப் பயிற்சி :

ஒவ்வொரு மாதமும் 1,2 ஆவது திங்கட்கிழமைகளில் காலை 11:00 மணிக்கு துவங்கி நடைபெறும்.





உறுப்பினர் திட்டம் :


உறுப்பினராக தொடர விரும்புவர்களுக்கும், தொடர்ந்து பயின்று பயிற்சி செய்ய விரும்புவோருக்கும் உதவும் வகையில் 1 மாதம், 3 மாதம், 6 மாதம், 12 மாதம் என நான்கு உறுப்பினர் திட்டங்கள் துவங்கப்பட்டு உள்ளன. விருப்பம் உடையோர், இணைய வழி தியானப் பயிற்சி வகுப்பில் தொடந்து பங்கேற்று பயிற்சி செய்து தங்கள் வாழ்வியல நல் மாற்றத்தை கொண்டு வர விரும்பும் அனைவரும் உறுப்பினர் திட்டத்தில் இணைந்து பய்ன்பெறலாம்.





மேலும் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் முழுத் திட்டத்தையும் பதிவிறக்கம் செய்து பாருங்கள். ஒவ்வொரு பயிற்சி வகுப்பைப் பற்றிய முழுத் தகவலும் PDF இல் உள்ளன். PDF ஐ நமது இணையதளத்தின் முதல் பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.





அன்புடன்

ரா. மகேந்திரன்

அக அமைதி தியானம்





Kommentare

Mit 0 von 5 Sternen bewertet.
Noch keine Ratings

Rating hinzufügen
bottom of page