அக அமைதி தியானம் நவம்பர் 2025 பயிற்சி திட்டம்
- Mahendran R

- 2 days ago
- 2 min read
அன்புடையீர்,
அமைதி நிறைந்த அன்பு வணக்கம்.
உங்கள் வாழ்வில் அமைதியும் அன்பும் நிறைந்திருக்க வாழ்த்துகள்.
அக்டோபர் மாத தியான வகுப்புகள்
இம்மாத தியானப் பயிற்சி கால அட்டவணையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி. இந்தத் தருணத்தில் அக்டோபர் மாதம் நமது பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பயிற்சி நடைபெறும் நாட்கள் மற்றும் தகவல்கள் இந்தக் காணொளி, அட்டவணையில் உள்ளது. மேலும் நீங்கள் எளிமையாக ஒவ்வொரு பயிற்சி வகுப்புகள் பற்றியும் முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து இணையப் பக்கங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

அக அமைதி தியானம்
ஏன்?
இன்றைய சமூகச் சூழலை முழுவதுமாக கருத்தில் கொண்டு நாம் அனைவரும் சந்தித்து வரும் பல்வேறு சவால்களுக்கு ஒரு நல்ல தீர்வை தியானப் பயிற்சிகள் வழங்கும் என்ற முழு நம்பிக்கையுடனே இந்த பயிற்சி வகுப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன.
அடிப்படை நோக்கம் " சமூக நல்மாற்றத்திற்கான பங்களிப்பை தியானப் பயிற்சிகளை மக்களுக்கு கற்றுத் தருதல் மூலம் செயல்படுத்துதல்"
தியான முறைகள்
இணைய வழி தியானப் பயிற்சிகளில் நாம் ஆனா பானா சதி, விபாசனா என்ற இரண்டு தியான முறைகளைக் கற்று, பயிற்சி செய்வதோடு அவற்றை நம் வாழ்வியல் மேம்பாட்டிற்கு எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பதனையும் அறிந்து கொள்வோம்.
பயிற்சி திட்டம்
2025 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ள பயிற்சிகள் அனைத்தும் அனைவருக்கும் பயன் தரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன். பொதுவாக இவை 1 நாள், 3 நாள், 5 நாள், 10 நாள் வகுப்புகளாக திட்டமிடப்பட்டுள்ளன.
பெண்களுக்கான சிறப்பு 1 நாள் மற்றும் 3 நாள் பயிற்சி வகுப்புகளும் பின்வருமாறு திட்டமிடப்பட்டுள்ளன. விரைவில் 3 ,5,10 நாள் பயிற்சிகள் பதிவு செய்யப்பட்ட பயிற்சிகளாக வழங்கப்படும் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு பயன் பெறுங்கள்.
அனைவருக்குமான பயிற்சிகள்
அனைவரும் கலந்து கொள்ளும் பயிற்சிகள்
2 நாள் பயிற்சி தியானப் பயிற்சி :
அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறும் வகையில் இரு நாள் தியானப் பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு வாரமும் காலை 5 மணி அல்லது இரவு 8 மணிக்கு நடைபெறுகின்றன.
இதில்
ஆனா பானா சதி தியானம்
விபாசனா தியானம் என்ற இரண்டு தியானம் மற்றும் அதில் உள்ள பல்வேறு வழிமுறைகளும் கற்றுத் தரப்படும்.
கலந்து கொள்ள விரும்புவோர் பின்வரும் முகவரியை நேரடியாகப் பயன்படுத்தலாம்.
பதிவு செய்யப்பட்ட வகுப்புகள் - Recorded Courses
நேரமின்மை காரணமாக நமது இணையவழி தியானப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்காக பதிவு செய்யப்பட்ட வகுப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் உங்கள் இல்லத்தில் இருந்தபடியே பயிற்சி வகுப்புகளை கற்றுக் கொள்ளும் வகையில் பதிவு செய்யப்பட்ட தியான வகுப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
இதில் 3 நாள், 5 நாள், 7 நாள், 10 நாள் பயிற்சி வகுப்புகளில் இணைந்து கொண்டு நீங்கள் உடனே கற்கத் துவங்கலாம். பயிற்சி வகுப்புகள் பற்றி மேலும் அறிய நமது இணையப் பக்கங்களைப் பாருங்கள்.
10 நாள் தியானப் பயிற்சி வகுப்பு:
பதிவு செய்த உடன் நீங்கள் கற்கத் துவங்கலாம். பயிற்சியில் இணையும் அனைவருக்கும் பல்வேறு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. அவற்றை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.
5 நாள் தியானப் பயிற்சி வகுப்பு:
பதிவு செய்த உடன் நீங்கள் கற்கத் துவங்கலாம். பயிற்சியில் இணையும் அனைவருக்கும் பல்வேறு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. அவற்றை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.
3 நாள் தியானப் பயிற்சி வகுப்பு:
பதிவு செய்த உடன் நீங்கள் கற்கத் துவங்கலாம். பயிற்சியில் இணையும் அனைவருக்கும் பல்வேறு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. அவற்றை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.
3 நாள் பெண்களுக்கான தியானப் பயிற்சி வகுப்பு:
பதிவு செய்த உடன் நீங்கள் கற்கத் துவங்கலாம். பயிற்சியில் இணையும் அனைவருக்கும் பல்வேறு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. அவற்றை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.
மேலும் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களது வாட்ச் அப் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
அன்புடன்
ரா. மகேந்திரன்
அக அமைதி தியானம்






Comments